சென்னை வந்தடைந்த 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு 2 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை சுமார்…

ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு 2 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வந்தடைந்தன.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை சுமார் 1 கோடியே 24 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், இன்று ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 590 கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னையை வந்தடைந்தன. தடுப்பூசிகள் அனைத்தும் விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும், இந்த தடுப்பூசிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.