கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான பிலிகுண்டுக்கு வந்தடைந்தது.
கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களுக்க் முன்னர் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், காவிரி ஆற்றில் ஓடு தண்ணீரின் அளவு அதிகரித்தது.
இந்நிலையில் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் தலா 5000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரானது தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடைந்தது. கர்நாடக அணைகளில் இருந்து, 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்போது, பிலிகுண்டுலுவை கடந்துள்ள காவிரி நீர், நாளை மேட்டூர் அணையை சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது படி படியாக உயர்ந்து 5000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தண்ணீரானது பிலிகுண்டு வந்தடைந்ததுள்ளது.







