கொரோனா பரவல் – பிரதமர் மோடி இன்று ஆலோசனை

உலக நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், இதுகுறித்து  பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த…

உலக நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், இதுகுறித்து  பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்த சூழலில், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க காரணமான ஒமிக்ரான் பிஎப்.7 வகை வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை குஜராத்தில் 3 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், புதிய வகை கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் , பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.