“வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்களைச் முன்னெடுக்க சி.ஜே.பி தயங்காது!” – சவுரவ் தாஸ் எச்சரிக்கை

மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்களைச் முன்னெடுக்க சி.ஜே.பி தயங்காது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீட்-வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மதரதிய்கல்வி அமைச்சர் தர்மேநரதிர பிரதான் பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் காவல்துறை மேற்கொண்டு வரும் கைது நடவடிக்கைகள் மற்றும் வழக்குப் பதிவுகளுக்கு காக்ரோச் ஜனதா கட்சி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “பாஜக மற்றம் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எவ்விதப் பழிவாங்கும் நடவடிக்கையோ அல்லது சட்டப் பூர்வ நடவடிக்கையோ எடுக்கப்படாது என மத்திய அரசு அளித்த உறுதியான வாக்குறுதியின் அடிப்படையிலேயே, சி.ஜே.பி தனது நாடு தழுவிய போராட்டங்களைத் தற்காலிகமாக ஒத்திவைத்தது. ஆனால், தற்போது சில மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன

அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளை வழங்கவும் கட்சியின் சட்டக் குழு களமிறக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிப்பதோடு, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர்.ரும் உடனடியாகத் திரும்பப் பெற மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மாணவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்பதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை நாளை (செவ்வாய்க்கிழமை, ஜூலை 28, 2026) வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

வீதிப் போராட்டங்களைக் கைவிட்டு, அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வந்த லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களின் நம்பிக்கையை அரசு பொய்யாக்கக் கூடாது. “வாக்குறுதி அளிப்பதில் அல்ல, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதில்தான்” அரசின் நம்பகத்தன்மை உள்ளது. கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் உடனடியாக விடுவித்து, வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் அடுத்தகட்டப் போராட்டங்களைச் முன்னெடுக்க சி.ஜே.பி தயங்காது” என அவர் எச்சரித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.