மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான கியூட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக, கியூட்(CUET) எனப்படும் பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்நிலையில் அடுத்தாண்டு நடத்தபடவுள்ள கியூட் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி, 2023ஆம் ஆண்டிற்கான CUET UG நுழைவுத் தேர்வு, மே 21ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் CUET PG நுழைவுத் தேர்வு ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
CUET UG நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 3வது வாரத்திலும், CUET PG நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் ஜூலையிலும் வெளியிடப்பட உள்ளது. அடுத்தாண்டு ஜூலைக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து, ஆகஸ்ட் 1ம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.








