சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகளுக்கான கொரோ னா படுக்கை வசதிகளை ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் குறைந்தாலும், தினசரி தொற்று 2 ஆயி ரத்தை நெருங்குவது, வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு போல் கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் என எச்சரித்த அவர், அனைத்து ஆலயங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது இல்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
எதிர்வரும் பண்டிகைகளை, கூட்டம் சேராமல், தனிமையில் கொண்டாடுமாறு அறிவுறுத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தடுப்பூசி குறைவாக போட்டுக்கொண்ட இடங்களைக் கண்டறிந்து, அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.