திருச்சி திரும்பினார் ஒலிம்பிக் தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆடவர்கான 400மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற திருச்சி லால்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் திருச்சி வந்தடைந்தார். திருச்சி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்…

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆடவர்கான 400மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற திருச்சி லால்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் திருச்சி வந்தடைந்தார்.

திருச்சி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா காலக்கட்டத்திலும் மிக சிறப்பாக டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியை நடத்தியதாகவும், அதில் சிறந்த அனுபவம் கிடைத்துள்ளதாகவும் கூறினார். மேலும் பதக்கங்களை வெல்ல நிறைய வாய்ப்பு இருந்தது, ஆனால் சின்ன சின்ன தவறுகள் காரணமாக அதை இழந்து விட்டதாக கூறிய அவர், கொரோனோ லாக் டவுன் போன்ற பல பிரச்சினைகளால் சிறிது கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது என்றும் கண்டிப்பாக இனி வரும் நாட்களில் முழுத்திறமையையும் வெளிப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சார்பில் தேர்வாகி தற்போது ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாங்கள் முன்னேறி உள்ளோம் என தெரிவித்த அவர், அடுத்ததாக காமன்வெல்த் மற்றும் வால்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் தங்களது பங்களிப்பு இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். தங்களது அணி நல்ல அணி என்று கூறிய அவர், கொஞ்சம் கடின உழைப்பு இருந்தால் நிச்சயமாக பதக்கம் வெல்லலாம் எனக் கூறியுள்ளார். மேலும் நமது ஊரில் உள்ள களம் வேறு, ஒலிம்பிக் களம் வேறு, மன ரீதியாக மிகவும் ஸ்டாராங்கா இருக்க வேண்டும், பயம் இல்லமால் நம் திறனை காட்டினால் கண்டிப்பாக நாம் வெற்றி பெறலாம் என ஆரோக்கிய ராஜீவ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.