முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியது

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 41 ஆயிரத்து 506 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிகிச்சை பலனின்றி புதிதாக 895 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4 லடசத்து 8 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், மேலும், 41 ஆயிரத்து 526 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 4 லட்சத்து 54 ஆயிரத்து 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 37 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 586 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சு

Mohan Dass

முதல் அரையிறுதியில் நியூசி.-பாக் மோதல்: மழையினால் ஆட்டம் ரத்தானால் முடிவு என்னவாகும்?

G SaravanaKumar

மீண்டும் சென்னை சங்கமம் : கனிமொழி எம்.பி உறுதி

EZHILARASAN D