பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், அமெரிக்காவில் விடுமுறையைக் கொண்டாடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மர்டர், வெல்கம், டபுள் தமால் உள்ளிட்ட படங்களின் மூலம், பாலிவுட்டில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர் மல்லிகா ஷெராவத். அமெரிக்கா பெண்களுக்கு சுதந்திரமான நாடு எனக்கூறும் இவர், அடிக்கடி அங்கு பயணம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வார இறுதி விடுமுறை நாட்களை கொண்டாடிய இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். உணவகத்தில் பிரமாண்டமான தோசையை கையில் ஏந்தியபடி உள்ள அவரது புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது.
மல்லிகா ஷெராவத்தின் பதிவில் தோசையை வீகன் உணவு என்றும், ஆரோக்கியமான உணவு என்றும் குறிப்பிட்டுள்ளதை, சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர். அதேபோல், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள அனைவருக்கும், அந்த ஒரு தோசையே போதுமானது எனவும், சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்







