ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், 2வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 196 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மைர் 61 ரன்களும், டுவைன் பிராவோ 47 ரன்களும் சேர்த்தனர்.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 140 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது.







