விஜயபாஸ்கர் ராஜினாமா – விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அத்தொகுதி காலியானதாக சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த சி.விஜயபாஸ்கர் நேற்று தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து பேசினார். அப்போது, விராலிமலை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக தனது கைப்பட எழுதிய கடிதத்தை வழங்கினார். அப்போது சட்டசபை செயலாளர் சாந்தி உடனிருந்தார். தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் சி.விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து விராலிமலை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.