முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுவது ஏன்?

மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்காதா நிலையில் தமிழகம், டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு நாடு முழுவதும் 18 கோடி கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் ஒவ்வொரு நாளும் மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக்கு உயர்வதால் மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை பற்றாக்குறையாகவே உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தச் சர்வதேச டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவுச் செய்துள்ளது. தமிழகத்தில் சுமார் 18 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை 18-45 வயதிற்குப்பட்டவர்களுக்கு போதுமானதாக இல்லாத காரணத்தால் உலகளாவிய டெண்டர்கள் மூலம் தடுப்பூசிகளைப் பெற தமிழக அரசு முடிவுச் செய்துள்ளது.

அதேபோல் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா, ஜார்கண்ட் மற்றும் ஓடிசா உள்ளிட்ட மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை நேரடியாக பெற முடிவுச் செய்துள்ளனர்.

கர்நாடகாவில் 18- 44 வயதுடையவர்களுக்கு மட்டும் 2 கோடி கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறது. இதற்காக சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது” என்கிறார் அம்மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயன்.

அதேபோல் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறுகையில், “கொரோனா தடுப்பூசிகளைத் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு வழங்காத காரணத்தால் நாங்கள் கட்டாயத்தின் பெயரில் தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி பெற முடிவுச் செய்துள்ளோம்” என்கிறார்.

கொரோனா 2-ம் அலை காரணமாக நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துவரும் நிலையில் மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதன்காரணமாக ஒவ்வொரு மாநிலமும் தடுப்பூசிகளை வெளிநாடுகளிலிருந்து நேரடியாகப் பெற டெண்டர் விட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இளைஞரை கவ்விச் சென்ற புலி: மூங்கில் கம்பால் போராடி மீட்ட நண்பர்கள்

Halley Karthik

சென்னை துறைமுகத்திலிருந்து சொகுசு கப்பல் சேவை!

Web Editor

அசாமில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது!

EZHILARASAN D