கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்றால் தினசரி 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.







