கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில், 43,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 95 பேர் உயிரிழந் துள்ளனர். 43,529 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 34,600 பேர் தொற்றில் இருந்து ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர்.
தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 71 ஆயிரத்து 738- ஆக உள்ளது. தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 320 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டங்களை பொறுத்தவரை, எர்ணாகுளத்தில் 6410 பேருக்கும் மலப்புரத்தில் 5388 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







