கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது: அமைச்சர் ரகுபதி

கொரோனா தடுப்பு பணியில், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி…

கொரோனா தடுப்பு பணியில், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஒரு லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக, பொதுமக்கள் 400 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியதால், அரசு பல்வேறு திட்டங்களை அறிவிக்க முடிந்ததாக தெரிவித்தார்.

கொரோனா மூன்றாவது அலை வந்தால், அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனைகளில் சிறார்களுக்கான படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பு பணியில், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.