கேரளாவில் 15 சதவீதமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 85 சதவீதமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டிய தேவையுள்ளது என்ற அம்மாநில மக்கள் நல்வாழ்வித் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் டெல்ட பிளஸ் கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் வீணா ஜார்ஜ், “பிற மாநிலங்களைபோல் கேரளாவிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒருநாளைக்கு 2.7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிற நிலையில் தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

மத்திய அரசு கேரளாவுக்கு வழங்கவேண்டிய கொரோனா தடுப்பூசி வந்து சேருவதில் தாமதம் நீடிக்கிறது. மேலும் கொரோனா நோய் தொற்றால் கேரளாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை 0.4 சதவீதமாக உள்ளது என வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.







