சாப்பிட தட்டு தர தாமதமானதால் திருமண நிகழ்ச்சியில் தகராறு – கேட்டரிங் ஊழியர் உயிரிழப்பு

டெல்லியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சாப்பிடுவதற்கு தட்டு தர தாமதமானதால் இசைக் குழுவினருக்கும், கேட்டரிங் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.  டெல்லி பிராசாந்த் விஹார் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த…

டெல்லியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சாப்பிடுவதற்கு தட்டு தர தாமதமானதால் இசைக் குழுவினருக்கும், கேட்டரிங் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 

டெல்லி பிராசாந்த் விஹார் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் இசைக் கச்சேரிக்கு மியூசிங் பேண்ட்,  உணவு பரிமாறுவதற்கு கேட்டரிங் சர்வீஸ் போன்றவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அப்போது கேட்டரிங் சர்வீஸை சார்ந்தவர்கள்  சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தனர். தட்டுக்கள் கழுவும் பணிகள் நடைபெற்றதால், உணவு பரிமாற தட்டுக்கள் வர தாமதமானது. இதனையடுத்து இசைக் குழுவை சேர்ந்தவர்கள் சாப்பிடுவதற்கான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு வந்தனர்.

இசைக் குழுவை சார்ந்த சிலர் கேட்டரிங் ஊழியரான சந்தீப் சிங்கிடம் உணவு பரிமாற தட்டுக்களை கேட்டுள்ளனர். தட்டுக்களை கழுவிக் கொண்டிருப்பதால் சிறிது தாமதமாகும் என சந்தீப் சிங் கூறியுள்ளார்.

இதனால் இசைக் குழுவினர் பொறுக்க முடியாமல் சந்தீப் சிங்கிடம் வாக்குவாததில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிப் போகவே தகராறாக மாறியது. இசைக் குழுவை சார்ந்தவர்கள் பிளாஸ்டிக் தட்டுக்களால் சந்தீப் சிங்கை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் சந்தீப் சிங்கை அவர்களிடமிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் இசைக் குழுவை சார்ந்த நான்கு நபர்கள் ஈடுபட்டதாகவும்,  இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள மீதமுள்ள இருவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.