மும்பையில் வரும் 12-ம் தேதி விண்டேஜ் கார்களின் பிரமாண்ட அணிவகுப்பு

மும்பையில் வரும் 12-ம் தேதி மிக பிரமாண்டமான முறையில் விண்டேஜ் கார் பேரணி நடைபெறவுள்ளது. விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப் ஆஃப் இந்தியா, மேற்கு இந்திய ஆட்டோமொபைல் அசோசியேஷன் ஆகியவை இணைந்து அதன்…

மும்பையில் வரும் 12-ம் தேதி மிக பிரமாண்டமான முறையில் விண்டேஜ் கார் பேரணி நடைபெறவுள்ளது.

விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப் ஆஃப் இந்தியா, மேற்கு இந்திய ஆட்டோமொபைல் அசோசியேஷன் ஆகியவை இணைந்து அதன் வருடாந்திர விண்டேஜ் கார் கண்காட்சியை வரும் 12-ம் தேதி மும்பையில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடத்த திட்டமிட்டுள்ளன. இந் நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பங்கேற்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, டெல்லி, ஹைதராபாத், புனே, அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் இருந்து வரும் வாகனங்களை உள்ளடக்கிய இந்த நிகழ்வில் அப்பாஸ் ஜஸ்தான்வாலாவுக்குச் சொந்தமான மிக பழமையான 1903 ஆண்டைச் சேர்ந்த ஹம்பர் மாடல் காரும் பங்கேற்கும் என கூறப்படுகிறது. இது தவிர மகாராஜாக்களுக்குச் சொந்தமான கார்களும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் நடைபெறும் இந்த விண்டேஜ் கார் பேரணியில் இதுவரை 184 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து பதிவுகள் நடைபெற்று 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர சுற்றுலாத்துறை அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை மகாராஷ்டிரா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் உலக வர்த்தக மையம் இணைந்து நடத்தவுள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.