ஐபிஎல் தொடரின் 19-வது தொடர் வருகிற 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அடிப்படையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் பெங்களூரு அணி மோதுகின்றது.
ஐந்து மாநில தேர்தல் காரணமாக முதல் 20 போட்டிகளுக்கான போட்டி அட்டவணை மட்டுமே வெளியிடப்படிருந்த நிலையில் தற்போது மீதமுள்ள போட்டிகளுக்கன அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதில் சென்னை அணியின் போட்டிகள் குறித்த விவரங்களை இதில் பார்க்கலாம்.
அட்டவணைப்படி சென்னை அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் உடன் மோதுகின்றது. இப்போட்டி கௌகாத்தியில் நடைபெறுகிறது.
தொடர்ந்து சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் , குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மே 21 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
மேலும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி சென்னை அணி தனது 14 போட்டிகளில் ஹோம் கிரண்டான சேப்பாக்கத்தில் 7 போட்டிகளையும், மீதமுள்ள போட்டிகளை எதிரணிகளின் மைதானத்திலும் எதிர்கொள்கிறது.
அது மட்டுமின்றி லீக் சுற்றுப் போட்டிகளில் சென்னை அணியானது, பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளை ஒரு முறை மட்டுமே சந்திக்கிறது.








