கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடரும் மழையால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து 8-வது நாளாக
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் கனமழையால் கோதையாறு, தாமிரபரணி ஆறு போன்றஆற்று பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கோதையாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதனை தொடர்ந்து திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று 8-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ள நிலையில், நீர்வீழ்ச்சி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து திரும்பி வருகின்றனர்.








