ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 26வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஏற்கனவே அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. ஓரிரு கட்டுப்பாட்டுகளை தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அரசின் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அலட்சியப்படுத்தாமல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.









