சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே தங்கம் விலை நேற்று குறைந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,060-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.14,030-க்கு, சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்த வரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




