நிறைவேறியது தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கான சட்டமசோதா

தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்களின் நலனுக்காக வாரியம் அமைப்பது தொடர்பான சட்டமசோதா, பேரவையில் நிறைவேறியது. 2011-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட மசோதாவை…

தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்களின் நலனுக்காக வாரியம் அமைப்பது தொடர்பான சட்டமசோதா, பேரவையில் நிறைவேறியது.

2011-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களின் நலனை உறுதி செய்யவும், ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பலன்களை வழங்குவதற்கான நிவாரணத்தை அளிக்கவும், நலவாரியம் ஒன்றை அமைக்க 2011-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் வாழாத தமிழர்களின் நலனுக்காக கூட்டுறவு சங்கங்கள் அல்லது வேறு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச் சட்டம் உருவாக்கப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை’ – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தற்போது, சங்கமாக இருந்ததை வாரியமாக மாற்றியுள்ளதால் அதிலுள்ள பதவிகளையும் அதற்கேற்ற வகையில், தலைவர், உறுப்பினர் என்று மாற்றுவதாகவும்,
வாரியத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 13-ல் இருந்து 15-ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்காத தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையரை அந்த வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக பதவி வகிக்கவும் அரசு முன்மொழிந்துள்ளது. அதன்படி, இந்த மாற்றங்களை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.