செங்கல்பட்டு : படாளம்-கருங்குழி இடையே ரயில்வே மேம்பாலம் – அடிக்கல் நாட்டினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

செங்கல்பட்டில் படாளம்-கருங்குழி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி, படாளம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே…

செங்கல்பட்டில் படாளம்-கருங்குழி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி, படாளம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே கிணார் மற்றும் கீபவலம் சாலையின் குறுக்கே புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கருங்குழியில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், மாவட்ட சேர்மன் செம்பருத்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மேம்பாலம் ரூ.20.64 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இந்த மேம்பாலத்தின் நீளம் 694 மீட்டர் என்பதால் பணி முடிவடையும் காலம் 24 மாதங்கள் ஆகும். இந்த மேம்பால பணியால் கினார், கத்தரிச்சேரி, தோட்ட நாவல் மற்றும் கே.கே.புதூர் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் என்று கூறப்படுகிறது. இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் இந்த மேம்பால கட்டுமானப் பணிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவின்பேரில் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.