முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் இணையும் மாதவன், மீரா ஜாஸ்மின் ஜோடி.!! உற்சாகத்தில் ரசிகர்கள்

திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்த மீரா ஜாஸ்மின், 20 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் டெஸ்ட் திரைபபடத்தின் மூலம் மாதவனுடன் இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான மீரா ஜாஸ்மின் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வளம் வந்தவர். கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் தன் துறுதுறு நடிப்பு மற்றும் குறுகுறு பார்வையின் மூலம் பிரபலமானார். மேலும் மாதவன் – மீரா ஜாஸ்மின் பெரிதாக ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஜோடியாகவும், கொண்டாடப்பட்ட ஜோடியாகவும் மாறியது. இப்படி முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததால், அடுத்ததாக விஜய் உடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா ஆகிய படங்களில் அவர்களுக்கு ஜோடியாக சேர்ந்தார். ஆனால் இவ்விரு படங்களும் அவருக்கு தோல்விபடங்களாக அமைந்தன. அதன் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இருந்தும் முதல் படம் அளவிற்கு வேறு எந்த படங்களும் கை கொடுக்காத நிலையில், தோல்விகளில் துவண்ட மீரா ஜாஸ்மினுக்கு லிங்குசாமியே, மீண்டும் சண்டைக்கோழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தார். தாவணி போட்ட தீபாவளி பாடல் முழுவதுமே மீரா ஜாஸ்மினின் இளமை ததும்பும் நடிப்பு எல்லோரையும் கவர்ந்திழுத்தது.விஷாலை சுலபமாய் கையாளும் மீரா ஜாஸ்மினின் குறும்புத் தனம் பெருவாரியாக ரசிக்கப்பட்டது.

தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது மற்றும் கலைமாமணி விருது என இளம் வயதிலேயே பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த மீரா ஜாஸ்மின் திடீரெனே திரையுலகில் இருந்து காணாமல் போனார். இவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் அகி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் திடீரென சமூக வலைத்தளங்கள் மூலமாக இவர் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார்.

தற்போது இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். அதுவும் எந்த ஹீரோவுடன் அறிமுகமாகி, ரசிகர்களால் அதிகள் கொண்டாடப்பட்டாரோ அதே ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க உள்ளார். அதுவும் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் கைகோர்க்கிறார் மீரா ஜாஸ்மின். இந்த ஜோடியை வெகுநாட்களாக ஒன்றாக திரையில் காண முடியவில்லையே என்று ரசிகர்கள் கவலைப்பட்டு வந்த நிலையில், தற்போது ரசிகர்கள் இந்த ஜோடியை மீண்டும் திரையில் காண போகிறார்கள்.

ஆமாம், தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக மாறி இயக்கிவரும் டெஸ்ட் என்கிற படத்தில், முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார் மீரா ஜாஸ்மின். இந்த படத்தில் கதாநாயகர்களாக மாதவன், சித்தார்த் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளதாக பட குழுவினர் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று

Janani

NCL 2023 : கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியை பந்தாடியது ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி

G SaravanaKumar

அச்சுறுத்தும் பொருளாதாரம் – அச்சத்தில் பாகிஸ்தான்

Halley Karthik