பிரம்மாண்டமான 125 தங்கும் விடுதிகள்? – அமைச்சர் சேகர்பாபு

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் வசதிக்காகப் பிரமாண்டமாக 125 தங்கும் விடுதிகள் கட்டும் பணி அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.…

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் வசதிக்காகப் பிரமாண்டமாக 125 தங்கும் விடுதிகள் கட்டும் பணி அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் அங்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக “பக்தர்கள் தங்கும் விடுதி” கட்டித்தர வேண்டும் என்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த பணத்தில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக பிரமாண்டமாக 125 தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா மாளிகை உள்ளிட்ட பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தித் தரக் கூடிய வகையிலே பல்வேறு கட்டிடங்கள் அமைக்கக்கூடிய பணி தொடங்கப்பட இருப்பதாகவும், அடுத்த மாத இறுதிக்குள் முதலமைச்சர் அடிக்கல் நாட்டி இந்த பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார் எனவும் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.