தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கவில்லை எனவும், ஜெயலலிதா கொண்டு வந்த முக்கிய திட்டங்களில் ஒன்றான மடிகணினி திட்டம் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அவர் சாடினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் ஆகிய திட்டங்களை திமுக அரசு கைவிட்டுவிட்டதாக குறிப்பிட்ட அவர், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: பிரம்மாண்டமான 125 தங்கும் விடுதிகள்? – அமைச்சர் சேகர்பாபு
தொடர்ந்து பேசிய அவர், விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், அதிமுக ஆட்சியில் தவறு செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
இதனைத்தொடர்ந்து, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு, நாட்டிற்கே முன்மாதிரி வழக்காக இருக்கும் வகையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









