5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. தொடர்ந்து, நேற்று எந்த போட்டியும் நடைபெறவில்லை. எஞ்சியுள்ள ஆட்டங்கள் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை நடக்கிறது. அந்த வகியல், இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 12-வது லீக்கில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் ஏறக்குறைய ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்து விடும். அதே சமயம் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று கம்பீரமாக தொடங்கிய குஜராத் அணி அடுத்த இரு ஆட்டங்களில் தோல்வியடைந்தது.
தற்போது குஜராத் அணி 4 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே 32 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் குஜராத் அணி ஆடும். தொடர்ந்து, வெற்றியடையும் வேகத்தில் பெங்களூரு அணி ஆடும். இதனால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இரு அணி விராங்கனைகளும் இன்றைய போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.







