அதிமுக போராட்டம்; அமைச்சர் சேகர்பாபு பதிலடி

அரசியல் களத்தில் அடையாளம் காட்டிக்கொள்ளவே அதிமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

அரசியல் களத்தில் அடையாளம் காட்டிக்கொள்ளவே அதிமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோயில் திருப்பணிகள் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அதிமுகவின் போராட்டம் குறித்து பேசிய அவர், போராட்ட தேதியை கூட தவணை முறையில் அறிவிக்கும் கட்சி அதிமுக எனவும், அரசியல் களத்தில் அடையாளம் காட்டிக்கொள்ளவே அதிமுக போராட்டம் நடத்துவதாகவும் கூறினார்.

முன்னதாக கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அமைச்சர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைதொடர்ந்து, கோவில் தெப்ப குளம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் அறை, உள்ளிட்ட கோவிலுக்கு சொந்தமான பல்வேறு இடங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.