“505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு…

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் விரிவான பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், கொரோனா நிவாரண நிதி, பால் விலை குறைப்பு, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும் அறிவிப்பு போன்ற 5 அறிவிப்புகளுக்கு ஆட்சி பொறுப்பேற்ற சில நிமிடங்களில் கையெழுத்திட்டதாகவும், 5-ல் முதல் 4 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் என்றும் கூறினார்.

கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணம், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு போன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், அரசு பொறுப்பேற்ற 10 மாதங்களில் 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அனைத்து வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் உறுதிபடக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.