முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்- கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் எனவும், இது எங்களுடைய தொகுதி, நாங்கள் நின்று வென்ற தொகுதி எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார்.

அதன்படி அடுத்த மாதம் பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப்ரவரி 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்றும், மார்ச் 02-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு, தமிழகம் எனற சர்ச்சையை ஏற்படுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகவும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோசம் எழுப்பி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், பல நாடுகள் சேர்ந்ததே ஒரு தேசம். நாட்டிற்கும் தேசத்திற்கும் வித்தியாசம் உள்ளது. ஜவஹர்லால் நேரு அனு அனுவாக தேசத்தை உருவாக்கினார். அதற்கு அவரது நண்பர்கள் துணையாக இருந்தனர். தேசத்தை பாதுகாக்க வேண்டும். ராகுல்காந்தி நடக்க காரணம் மக்களிடையே உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்பதே ஆகும். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளதை பார்த்து பாஜக அச்ச படுகிறது.

தமிழக ஆளுநர் பாஜக-வின் பிரதிநிதியாக செயல்படுகிறார். ஒரு கட்சியின் பிரதிநிதியாக அவர் செயல்பட கூடாது. ஆளும் பாஜக ஆளுநர் ரவி,அண்ணாமலை,தமிழிசை போன்றவர்களை உருவாக்க நினைத்தனர் ஆனால் அவர்கள் உருவாக்கிய எந்த வேடங்களும் வெற்றி பெற வில்லை நல்ல சிந்தனை, நல்ல கருத்தை , நல்ல தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் சிறிதும் இல்லை என்று கூறியிருந்தார்.

மேலும் தெடர்ந்து ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர் , இந்த ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் போட்டியிடுவார். ஈரோடு கிழக்கு தொகுதி எங்களுடைய தொகுதி, நாங்கள் நின்று வென்ற தொகுதி. எனவே இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் தான் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். அதற்காக திமுக, விசிக, மதிமுக கட்சி தலைவர்களை இன்று மாலை சந்தித்து பேச உள்ளோம். அவர்களிடம் ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்க உள்ளோம் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேருந்து பயணவழி உணவகம்: சைவ உணவு நிபந்தனை நீக்கம்

EZHILARASAN D

கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!

Vandhana

அக்கா இல்லாமல் முதல் முறையாக; சசிகலா உருக்கம்

G SaravanaKumar