மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் கீழ், ஓமலூரில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பி விவசாயம் செழிக்க பாடுபடுவேன், என காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் வாக்குறுதி அளித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம், கருப்பணம்பட்டி, பஞ்சு காளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பாலி கடை பகுதியில் உள்ள தேனீர் கடைக்கு சென்ற அவர், தேநீர் தயாரித்தவாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் பேசிய அவர், மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் கீழ், ஓமலூர் பகுதியில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பி, விவசாயம் செழிக்க பாடுபடுவேன் என தெரிவித்தார்.
மேலும், ஓமலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல், பொதுமக்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், வாக்குறுதி அளித்தார்.







