பல்வேறு விருதுகளை தமிழகத்திற்கு பெற்று தந்து பெருமை சேர்த்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி : ஜி.கே.வாசன்!

உள்ளாட்சி துறையில் பல்வேறு விருதுகளை தமிழகத்திற்கு பெற்று தந்து பெருமை சேர்த்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புகழாரம் சூட்டினார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை…

உள்ளாட்சி துறையில் பல்வேறு விருதுகளை தமிழகத்திற்கு பெற்று தந்து பெருமை சேர்த்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புகழாரம் சூட்டினார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஆர்.எஸ்.புரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், உள்ளாட்சி துறையில் பல்வேறு விருதுகளை தமிழகத்திற்கு பெற்று தந்து பெருமை சேர்த்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்றும், அதிமுக கட்சிக்கு பல்வேறு சோதனைகள் வரும்போது, முதல்வருக்கு பக்கபலமாக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக கூட்டணியில் தமாகா நட்புடன் பயணிக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் ஒரு காரணம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புகழாரம் சூட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.