காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காங்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐந்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது.
அந்த வகையில் இன்று உத்தரப்பிரதேசத்தின் ஹஸ்டினாபூர் மற்றும் மீருட் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த பரப்புரையின் போது தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் டிராக்டரில் பயணித்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களிடையே காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பது இந்த தேர்தல் பரப்புரையில் தெரிகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.
ஐந்து மாநில தேர்தலில் முதலாவதாக நடக்கும் உத்தரபிரதேச தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 10ம் தேதி துவங்கவுள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.







