’லியோ’ திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பதிவை டேக் செய்து லோகேஷ் கனகராஜ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம், நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான ‘லியோ’ திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டுள்ளது.
ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும், பைரசி தளங்களில் லியோ திரைப்படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். உலகளவில் 6000 திரைகளில் வெளியான ‘லியோ’திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2023-ல் உலக அளவில் அதிக வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் எனும் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமான தெரிவித்துள்ளது.
https://twitter.com/Dir_Lokesh/status/1715404634716790786?t=cD_rEzXwoAIqRoWjm–DkA&s=08
ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை ‘லியோ’ திரைப்படம் மிஞ்சுமா என்பதே ரசிகர்களின் மிகவும் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ’லியோ’ திரைப்படம் வெளியாவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை லோகேஷ் கனகராஜ் தனது பக்கத்தில் டேக் செய்து நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அந்த பதிவின் கமெண்டில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.







