தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் – எடப்பாடி பழனிசாமி பதில்?

தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு பொது வெளியில் பேச கூடாது என எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

ஈரோட்டில்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்து நான் ஏற்கனவே தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாகப் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். சட்டமன்றத்திலும் இது குறித்துப் பேசியுள்ளேன்.

​இந்த அரசாங்கம் அமைந்ததிலிருந்து இன்றுவரை கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி ஆகியவை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு முறை தட்டி எழுப்பினாலும், இந்த அரசாங்கம் கும்பகர்ணனைப் போலத் தூங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்குத் திராணியற்ற அரசாங்கமாக இது இருப்பதால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து, மக்கள் வாழத் தகுதியற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

​முன்னதாக, நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு இன்னும் எண்ணம் இல்லை என செங்கோட்டையன் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “பொது வெளியில் பேசக் கூடாது, பொதுவெளியில் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று இருக்கிறது; உரிய சூழல் வரும்போது அனைத்து ஊடக நண்பர்களையும் அழைத்துத் தெளிவாகப் பதிலளிக்கிறேன்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.