நாகையில் சாராய வியாபாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
நாகை மாவட்டம் திருகண்ணங்குடி கிராமத்தில் ஹரிஹரன், தரணிக்குமார் ஆகிய இரண்டு சாராய வியாபாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஏழு பேருக்கு அரிவாள் வெட்டும், இரண்டு இரு சக்கர வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த தரணிக்குமார், செல்வராஜ், சரண்யா, ராஜேந்திரன், ராஜா என்கிற முருகையன், சுதாகர், சிபிஎம் கிளை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் வெட்டு காயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஹரிஹரன், செம்பியன்மாதேவி பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்து திருடிய வழக்கில், குண்டாஸில் சிறையில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பு வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருகண்ணங்குடி கிராமத்தில், நடந்த இந்த மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியாலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








