மத்தியப் பிரதேசத்தில் நடுரோட்டில் வைத்து உணவு டெலிவரி நிறுவன ஊழியரை செருப்பால் அடித்த பெண்ணின் வீடியோ அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஒருவரை பெண் ஒருவர் தன் காலில் உள்ள செருப்பைக் கழட்டி அடிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சுற்றி நிற்கும் பொதுமக்கள் நிறுத்தச் சொன்னாலும் அந்த பெண் தொடர்ந்து அந்த நபரை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில், அந்த பெண் அவரை எட்டி உதைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தவறான திசையில் வந்த உணவு டெலிவரி நிறுவன ஊழியரின் பைக் தனது ஸ்கூட்டியில் மோதியதில் அந்த பெண் காயம் அடைந்ததால், அவரை செருப்பால் தாக்கியதாக கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் அருகில் வரும் வாகனங்களை கவனிக்காமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
உணவு டெலிவரி நிறுவன ஊழியர் தவறான பாதையில் நுழைந்தது தவறு என்பதை ஏற்றுக்கொண்ட பலர், அந்த பெண் சூழ்நிலையை கையாண்ட விதத்தை சமூக ஊடக தளத்தில் கண்டித்து வருகின்றனர்.