ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி: ஒன்றரை வருடம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி

2000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு ஒரு வருடம் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை எழும்பூர்…

2000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு ஒரு வருடம் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்த சண்முகம் என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு விடுப்பு கடிதம் கொடுக்காமலும், பல
நாட்கள் பணிக்கு வராமலும் இருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய உயர்
அதிகாரி, அவரது ஊதியத்தில் இருந்து மாதம் ரூ. 500 வீதம் பிடித்தம் செய்து, அவரை
ஓய்வு பெற அனுமதி வழங்கி 2008ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மத்திய மண்டலம் இணை காவல் துறை ஆணையர் அலுவலம் மூலமாக தமிழ்நாடு அரசிடம் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு உள்துறை செயலாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதா? என்பதை தெரிந்துகொள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று விசாரித்தார்.

இதையும் படிக்க: ஹேக் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு-கட்சியினர் அதிர்ச்சி!

அப்போது, மனு மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அவரிடம் சூப்பிரண்டன்ட்
அசோக்குமார் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதை கொடுக்க விருப்பம் இல்லாத
சண்முகம், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து, லஞ்சம் வாங்கும்போது சூப்பிரண்டு அசோக்குமாரை கையும் களவுமாக கைது
செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும்
சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று
கூறி, அசோக்குமாரை விடுதலை செய்து கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி
தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறை மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். அரசு தரப்பில் கூடுதல்
குற்றவியல் வழக்கறிஞர் கஸ்தூரி ரவிச்சந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், ‘‘காவல் துறை சுமத்தியுள்ள
குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளது. எனவே, அசோக்குமாரை குற்றவாளி எனக் கூறி அவருக்கு 2 சட்டப்பிரிவுகளின் கீழ் ஓர் ஆண்டு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.