தீவிரவாத செயல்களை எதிர்த்து போராடுவது அவசியம் – ஐநா செயலாளர் அழைப்பு

அனைத்து நாடுகளும் தீவிரவாத செயல்களை தடுப்பதும், ஒரே நேரத்தில் எதிர்த்து போராடுவதும் அவசியம் என ஐநா செயலாளர் அன்டோனிய குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.   ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் அரசுமுறைப்…

அனைத்து நாடுகளும் தீவிரவாத செயல்களை தடுப்பதும், ஒரே நேரத்தில் எதிர்த்து போராடுவதும் அவசியம் என ஐநா செயலாளர் அன்டோனிய குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார். இதற்கிடையே, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தனது இந்தியா பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் விடுதியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

 

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருடன் குட்டெரெஸ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தீவிரவாதம் முற்றிலும் தீமையானது. அதனை நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள், சாக்குபோக்குகள் எதுவும் இருக்கக்கூடாது என கூறினார்.


வரலாற்றில் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக செயல்களால் 166 பேர் உயிரிழந்த இடத்தில் தான் இருப்பது ஆழ்ந்த உணர்வுடன் உணருவதாக குறிப்பிட்டார். தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவது ஐக்கிய நாடுகள் சபையின் முன்னுரிமையாகும். எனது முதல் சீர்திருத்தம் தீவிரவாதத்தை எதிர்த்து அலுவலகம் உருவாக்கியதற்கான முன்மொழிவு ஆகும் என்றார். இன்றைய நேரத்தில் அனைத்து நாடுகளும், தீவிரவாத செயல்களை தடுப்பதும், ஒரே நேரத்தில் எதிர்த்து போராடுவது அவசியம்.

 

நாம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, பன்முகத்தன்மையே செழுமை என்பதை உணர்ந்து வாழ வேண்டும். மேலும், தான் உலகின் மிகவும் மாறுபட்ட நாடுகளில் ஒன்றில் இருக்கிறேன். தீவிரவாதத்திற்கு எதிரான அனைத்து ஐநா நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.