முக்கியச் செய்திகள் சினிமா

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங்

இன்சூரன்ஸ் காலாவதியான காரை பயன்படுத்திட்டு வருவதாக ரன்வீர் சிங் மேல நடவடிக்கை எடுக்க இணையதளம் மூலமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பத்மாவதி, ராம்லீலா, கல்லிபாய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ரன்வீர் சிங். இந்தியாவே வியக்கும் உடல் மொழி, நேர்த்தியா நடிப்பாற்றல் மூலம் ரன்வீர் சிங் புகழ் பெற்றிருந்தாலும் அவ்வபோது ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையான ஒன்று.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பெரும்பாலான பாலிவுட் நடிகர்கள் நடிக்க மறுக்கும் ஆணுறை விளம்பரம் ஒன்றில் ரன்வீர் சிங் நடித்து சர்ச்சையை கூட்டினார். நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, கங்கனா ரனாவத் ஆகியோரோடு அடிக்கடி தீவிர வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்தார் ரன்வீர் சிங். இவர் கடந்த 2018ம் ஆண்டு நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மையில்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தனர்.

வித்தியாசமான உடைகளில் தோன்றி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு மக்களின் கவனத்தை பெற முயற்சி செய்து வந்த ரன்வீர் சிங் எல்லாவற்றுக்கும் உச்சமாக நிர்வாண போட்டோவை வெளியிட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதற்கு பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்சூரன்ஸ் காலாவதியான காரை ஓட்டியதாக ரன்வீர் சிங் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சொகுசு காரை வாங்கி ரன்வீர் சிங் ஓட்டி வருகிறார். இந்த காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டதாகவும் அதை புதுப்பிக்காமல் காரை ஓட்டும் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணைய தளம் மூலம் ஒருவர் காவல்துறைக்கு புகார் தெரிவித்து உள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள மும்பை காவல்துறையினர் ”இதுகுறித்து போக்குவரத்து பிரிவு காவலருக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்” என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் புகார் கூறியவரை ரன்வீர் சிங் ரசிகர்கள் வலைத்தளத்தில் கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புகைப்பிடிக்கும் வயதை உயர்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு

Mohan Dass

12-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு

Halley Karthik

வாகனம் மோதி சிறுமி பலி – ஓட்டுநரை தீயிட்டு கொன்ற பொதுமக்கள்

EZHILARASAN D