காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி குத்திக்கொலை – இளைஞர் கைது!

கா்நாடகாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான நிரஞ்சன் ஹிரேமட்டின் மகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கா்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் வித்யாநகரை சேர்ந்தவர்…

கா்நாடகாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான நிரஞ்சன் ஹிரேமட்டின் மகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கா்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் வித்யாநகரை சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சி தலைவர்கரின் ஒருவரான நிரஞ்சன் ஹிரேமட்.  இவரது மகள் நேஹா ஹிரேமத்.  இவர் ஹூபள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்சிஏ முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த கல்லூரியில் பயிலும் பயாஜ்,  நேஹாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  அவர் தனது காதலை பலமுறை நேஹாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பயாஜின் காதலை நேஹா ஏற்கவில்லை என தெரிகிறது.  ஆனாலும் நேஹாவை பயாஜ் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் நேஹா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில்  கல்லூரி வளாகத்தில் வைத்து பயாஜ் நேஹாவை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.  உடனடியாக நேஹாவை கிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  ஆனால்,  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதனைத் தொடர்ந்து, வித்யாநகர் போலீசார் பயாஜை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.