ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவரின் உடலை வாங்க மறுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டையைச் சேர்ந்த குமார், சென்னை மாநிலக் கல்லூரில் முதலாமாண்டு பயின்று வந்துள்ளார். கல்லூரி முடித்துவிட்டு நண்பர்களுடன் புறநகர் ரயிலில் சென்று கொண்டிருந்த குமாரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இறக்கி அழைத்து சென்றுள்ளனர்.
இதனிடையே சக மாணவருக்கு குமார் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் வாழ முடியாது என உருக்கமாக பேசி, ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு செய்துள்ளார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், குமாரின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நிலவும் பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








