மத்திய சுகாதார அமைச்சகம், பிரேத பரிசோதனைக்கான நெறிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பிரேத பரிசோதனை நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்தால் தவிர உயிரிழப்பு பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது. இந்த புதிய நடைமுறைகள் மூலமாக உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஊக்குவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
தொழில்நுட்பங்கள் உள்ள இந்த கால கட்டத்தில், போதிய உள்கட்டமைப்புகள் உள்ள, மருத்துவமனைகளில் இரவு நேர பிரேத பரிசோதனை செய்வது இப்போது சாத்தியமாகும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
உடல் உறுப்பு தானத்திற்கான பிரேதப் பரிசோதனை முன்னுரிமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும், பிரேத பரிசோதனையை வழக்கம் போல் நடத்தும் வகையிலான உள்கட்டமைப்பைக் கொண்ட மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் பிரேத பரிசோதனை நடத்தலாம் என்றும் மத்திய அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.







