கல்லூரி மாணவி விவகாரம் – நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்

அரசு பேருந்தில் பறை இசை கருவிகளை கொண்டு செல்ல முடியாது என தகாத வார்த்தைகளால், கல்லூரி மாணவியை திட்டிய அரசு பேருந்து நடத்துனர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச்…

அரசு பேருந்தில் பறை இசை கருவிகளை கொண்டு செல்ல முடியாது என தகாத வார்த்தைகளால், கல்லூரி மாணவியை திட்டிய அரசு பேருந்து நடத்துனர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா. இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தனது கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் இருந்து பறை இசை கருவியை கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு நிகழ்ச்சி முடிந்து சிவகங்கைக்கு கொண்டு செல்வதற்காக நேற்று இரவு மதுரை அரசு பேருந்தில் எறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த நடத்துனர் கணபதி என்பவர், அரசு பேருந்தில் பொதுமக்களுக்கு மட்டும்தான் அனுமதி. இது போன்ற பறை இசை கருவிகள் எல்லாம் கொண்டு செல்ல முடியாது என தகாத வார்த்தையால் பேசி திட்டியுள்ளார். அப்போது அந்த கல்லூரி மாணவி பறை இசை கருவிக்கான டிக்கெட்டை வேண்டுமானால் வாங்கிக் கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.

அதற்கு நடத்துனர் கணபதி மறுத்தது மட்டுமின்றி பெண் என்றும் கூட பாராமல், அந்த இரவு நேரத்தில் வண்ணாரப்பேட்டை என்ற இடத்தில் பாதியிலேயே பேருந்தை விட்டு இறக்கிவிட்டுளளார். இது தொடர்பாக நியூஸ்7தமிழ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து, நியூஸ்7தமிழ் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக அரசு போக்குவரத்து கழகம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு பேருந்து கழக தாமிரபரணி கிளை நடத்துனர் கணபதியை இன்று காலை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.