அரசு மானிய தொகை பெற்று தருவதற்கு லஞ்சம் வாங்கிய மீன் வளத்துறை ஆய்வாளர் கைது !

கோபிசெட்டிபாளையம் செரையாம்பாளையத்தில் கார்த்திக் என்பவர் மீன் பண்ணை அமைப்பதற்கான அரசு மானிய தொகை 2.80 லட்சம் ரூபாயை பெற்றுத்தருமாறு கேட்டதற்கு 31ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மீன் வளர்ச்சித்துறை ஆய்வாளர் அருள்ராஜ் என்பவரை ஈரோடு…

கோபிசெட்டிபாளையம் செரையாம்பாளையத்தில் கார்த்திக் என்பவர் மீன் பண்ணை அமைப்பதற்கான அரசு மானிய தொகை 2.80 லட்சம் ரூபாயை பெற்றுத்தருமாறு கேட்டதற்கு 31ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மீன் வளர்ச்சித்துறை ஆய்வாளர் அருள்ராஜ் என்பவரை ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கார்த்திக் செரையாம்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை பகுதியில் உள்ள அவருக்கு
சொந்தமான விவசாய நிலத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன் பண்ணை அமைத்து
உள்ளார். மீன் பண்ணை அமைப்பதற்கு தமிழக மீன் வளர்ச்சித்துறை 2.80 லட்சம்
ரூபாய் மானியம் வழங்கி வருகிறது. கார்த்திக் மீன் பண்ணை அமைத்ததும் முதல் கட்ட
மானிய தொகை 1.60 லட்சம் ரூபாயை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அவரது வங்கி
கணக்கிற்கு மீன் வளர்ச்சித்துறை அலுவலகம் மூலம் வழங்கப்பட்டது.

மீதமுள்ள மானியத்தொகை 1.20 லட்சம் ரூபாயை கடந்த 19ம் தேதி மீன் வளர்ச்சித்துறை
வழங்கியது. இந்நிலையில் கடந்த 17 ம் தேதி கார்த்திக்கை தொடர்பு கொண்ட கோபி
இரண்டு நாட்களில் மானியத்தொகை 1.20 லட்சம் வழங்கப்படும் என்றும் அதற்காக 31 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பினர்.

லஞ்ச பணத்துடன் ஓடத்துறை குளம் சென்ற போது அங்கு வந்த ஆய்வாளர் அருள்ராஜ்,
கார்த்திக்கிடம் லஞ்ச பணத்தை பெற்ற போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு
போலீசார், அருள்ராஜை கையும் களவுமாக கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆய்வாளர் அருள்ராஜை, கோபியில் உள்ள மீன்
வளர்ச்சித்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.