கல்லூரி பேருந்து – பள்ளிவேன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது.

திருச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து – பள்ளிவேன் நேருக்கு நேர் மோதியதால் பள்ளி, மாணவ மாணவிகள் 3 பேர் உட்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில்…

திருச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து – பள்ளிவேன் நேருக்கு நேர் மோதியதால் பள்ளி, மாணவ மாணவிகள் 3 பேர் உட்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து 50 மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கண்ணன் என்ற முதியவர் ஓட்டி வந்தார். பேருந்தானது ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும்போது அதன் வேகம் அதிகமாக இருந்துள்ளது. வயது முதிர்வு காரணமாக டிரைவர் கண்ணனால் பேருந்து வேகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. அவரின் கட்டுப்பாட்ட இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதுடன் இல்லாமல் எதிரே வந்த மற்றொரு தனியார் பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதி் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 மாணவி, ஒரு மாணவன் மற்றும் பொதுமக்கள் என 10 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.