அதிக கட்டணம் வசூல்…? – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவுறுத்தல்…!

தனியார் பள்ளிகள் தங்கள் கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழ் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பள்ளி கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆசிரியர்கள் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும்.

தனியார் பள்ளிகள் அவர்களின் கல்வி கட்டண விவரங்களை அவர்தம் இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்.

மாணவர்களுக்கு ஏற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிரப்பப்படாத ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். விரைவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் க்ளாஸ் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.