தமிழ் நாட்டை போலவே புதுச்சேரியிலும் முதலமைச்சர் விஜயின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ நாளை (23.07.2026) புதுச்சேரியில் 13 திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் திருக்கனூர் சுதா, வில்லியனூர் அசோக், ஜீவா திரையரங்குகளில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் ராக்கெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜயின் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பிரியா மணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவிஎன் புரெடெக்ஷன் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.




