காவிரி நீர் பங்கீட்டை நிர்வகிக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கின்றன.
காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் இதுவரை 52 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடைசி கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி கூடியது.
இந்த நிலையில், காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் டெல்லி, பிகாஜி காமா பிளேஸில் உள்ள எம்.டி.என்.எல். வளாகத்தில் பெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சத்யபிரதா சாகு மற்றும் காவேரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.




